மல்டி மீடியா இன்றைய உலகில் முக்கியப் பங்குவகிக்கிறது. ஆனால் பல நிறுவனங்கள் இதை சாதகமாக்கி கொள்ளை அடிக்கின்றன. தங்களிடம் சேர்ந்துக் கற்றால் 100% வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசம் செய்கின்றன. இவர்களின் ஆசை வார்த்தையில் மயங்கி இத்துறைப் பற்றி சிறிதும் தெரியாதப் பலர் இவர்களிடம் மாட்டிக்கொள்கிறார்கள். உண்மையில் இவர்கள் வேலை வாங்கித்தருவதில்லை.
மல்டி மீடியாவைப் பொறுத்தவரையில் அடிப்படைத்தகுதி கற்பனைத் திறனாகும். அதோடு மட்டுமல்லாமல் வரையத் தெரியவேண்டும். இவை இரண்டும் இருந்தால் மட்டுமே இத்துறை நுழைய முடியும். இதை அறியாத தெரியாதப் பலர் மேற்க்கூறியபடி மாட்டிக்கொள்கிறார்கள்.
மேலும் மல்டி மீடியாவைப் பொறுத்தவரையில் வேலைத்தரும் நிறுவனங்கள் B.F.A பட்டதாரிகளையே தேர்ந்த்தெடுக்க விரும்புகின்றன. B.F.A - ப்பற்றிய விவரங்கள் அடுத்தப் பதிவில்..
இப்போ ஒரு அனிமேசன்..
No comments:
Post a Comment