Pages

Monday 10 January, 2011

கேப்டனின் கூட்டணி குருமா;



நேற்று (9.01.11) சேலத்தில் தேமுதிக உரிமை மீட்பு மாநாடு (என்ன உரிமைனு கடைசிவரை சொல்லவே இல்லயே... ) வெற்றிகரமாக முடிந்த்தது.
பேனர் வைப்பதில் திமுக வையே மிஞ்சி விட்டனர் தேமுதிக வினர் (போட்டோலாம் செம டெரர்..). கூட்டத்திற்கும் குறைவில்லை. இவ்வளவு கூட்டத்தை விஜயகாந்த்தே எதிர் பார்த்திருக்கமாட்டார்.இது திமுகவிற்கு கண்டிப்பா கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கும் (போட்டி மாநாடு எப்போ?). வித்தியாசமாக லேசர் சோ காட்டினார்கள். பேசிய எல்லோரும்
காவல்த்துறையை வறுத்துவிட்டார்கள். சிலர் வீரபாண்டி ஆறுமுகத்தை வறுத்தார்கள்.



விஜயகாந்த் கலைஞர்,ஸ்டாலின், அழகிரி, ராஜா என எல்லாரையும் போட்டுத்தாக்கினார். கூட்டணி குறித்து விஜயகாந்த் எதும் சொல்வார்
என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. இந்த இடத்தில் கொஞ்சம் ஜெ ஸ்டைல். கூட்டணி வேண்டும் என்று சொல்பவர்கள் கைகளை உயர்த்துங்கள் என்று  கேட்க கிட்டத்தட்ட அத்தனை பேருமே கையை உயர்த்த‌ இதை விஜயகாந்த்தே எதிர்பார்க்கவில்லை. அடுத்து கூட்டணி வேண்டாம் என்று சொல்பவர்கள் கைகளை உயர்த்துங்கள் என்று அவர் கூறியபோது கொஞ்சம் பேரே கைகளை உயர்த்தினர். இதையடுத்து அவர் ஏதாவது ஒரு அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரோ, சட்டசபையில் இப்படி கேட்டு முடித்தவுடன் பெரும்பான்மையானோர் கைகளை உயர்த்தியதால் அதுவே வெற்றி பெற்றதாக அறிவிப்பார்கள். ஆனால் நான் அப்படிக் கூற மாட்டேன். மாறாக, உங்களையும், என்னையும், நமது கட்சியையும் யாரிடமும் அடகு வைக்க மாட்டேன் என்று குழப்பமாக பதிலளித்து நிறுத்தினார். பேசி முடித்தப்பிறகு மீண்டும் ஒரு முறை ஜெ ஸ்டைலில் கூட்டணி முடிவு குறித்து என்னிடம் விட்டு விடுங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் கவலைப்படாமல் செல்லுங்கள். உங்களையும், என்னையும், நமது கட்சியையும் யாரிடமும் அடகு வைக்க மாட்டேன் என்றார்.

     அதிமுக மாநாட்டை பெரிதாகக் கூறிய மீடியாக்கள் அதைவிட அதிகம் பேர் கூடிய இந்த மாநாட்டைப் பற்றி ஏனேர் எதும் பெரிதாகக் கூறவில்லை.  

கூட்டணி பற்றி தெளிவாக எதுவும் சொல்லவில்லை எனினும் இந்த மாநாட்டின் மூலம் தனது பலத்தை காட்டியிருக்கிறார் விஜயகாந்த். கூட்டணி பேரம் கண்டிப்பா சுடு பிடிக்கும்.



.

1 comment:

  1. "கடவுளோட கூட்டணி" என்னாச்சு?கண்டிப்பா "இந்த"டாகுடர சேத்துக்கிறது டேஞ்சரு தானுங்கோ!

    ReplyDelete