Pages

Tuesday 30 November, 2010

கிறுக்கல்கள்

ரு குறள்

நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும்
வானின் றமையா தொழுக்கு.

உலகில் மழையே இல்லையென்றால் ஒழுக்கமே கெடக்கூடும் என்ற நிலை இருப்பதால், நீரின் இன்றியமையாமையை உணர்ந்து செயல்பட வேண்டும்.


ஒரு செய்தி

தொழிற்சங்கத் தேர்தல்: 54,448 வாக்குகள் வித்தியாசத்தில் தொ.மு.ச. வெற்றி.


Saturday 27 November, 2010

இயக்குனர்களுக்கு ஒரு வேண்டுகோள் ;

காதல் இல்லாத தமிழ் திரைப்படங்களே இல்லை. எல்லா படங்களிலும் காதல் முக்கியத்துவம் வாய்ந்ததாக காட்டப்படுகிறது. இதுப் பற்றி கருத்துக் கூற எதுவுமில்லை. ஆனால் சமீபமாக பள்ளிச் சிறுமிகள் காதலிப்பதுப் போலவும் நாயகனுடன் ஊர சுற்றுவதுப் போலவும் காட்சிகள் இடம் பெறுகின்றன.இதில் கொடுமை என்னவென்றால் பள்ளிச்  சீருடையிலேயே நாயகி நாயகனுடன்  ஊர் சுற்றுகிறாள்.

Tuesday 23 November, 2010

ஓரங்கட்டப்படும் சந்தானம் ;

சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் பாஸ் என்கின்ற பாஸ்கரன்.ஆர்யா, நயன்தாரா மற்றும் சந்தானம் நடித்த இந்த படத்தில் சந்தானத்தின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. இந்த படத்தின் விளம்பரங்களில் ஆர்யாவும் சந்தானமும் இணைந்திருந்தப் படங்களே வெளியிடப்படிருந்தன. இந்நிலையில் சமீபமாக செய்தித்தாள் விளம்பரங்களில் சந்தானத்தின் படங்கள் வெளியிடப்படவில்லை. இப்பொழுது சுவரொட்டிகளிலும் அவரை காணவில்லை. இதனால் சந்தானம் ஓரங்கட்டப்படுகிறாரோ என்று தோன்றுகிறது.

                                           அன்று

Sunday 21 November, 2010

என்ன தலைப்பு வைக்கலாம்

இந்த பதிவுக்கு என்ன தலைப்பு வைக்கிறதுனு தெரியலிங்கோ,
அதான் அதையே தலைப்பா வச்சிட்டேன்.



ஒரு குறள்


அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.


எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக 
கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை 
அடிப்படையாக கொண்டிருக்கிறது.