
காதல் இல்லாத தமிழ் திரைப்படங்களே இல்லை. எல்லா படங்களிலும் காதல் முக்கியத்துவம் வாய்ந்ததாக காட்டப்படுகிறது. இதுப் பற்றி கருத்துக் கூற எதுவுமில்லை. ஆனால் சமீபமாக பள்ளிச் சிறுமிகள் காதலிப்பதுப் போலவும் நாயகனுடன் ஊர சுற்றுவதுப் போலவும் காட்சிகள் இடம் பெறுகின்றன.இதில் கொடுமை என்னவென்றால் பள்ளிச் சீருடையிலேயே நாயகி நாயகனுடன் ஊர் சுற்றுகிறாள்.